வழி மாறிய வழக்கங்கள்

முன் குறிப்பு: இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. சமுதாயத்தின் நிகழ்வுகளை எனது கோணத்தில் வெளிப்படுத்துகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் பார்த்த காட்சிகள் சற்று சிந்திக்க வைத்தது!
உறவினர் ஒருவர் காலமானால், மூன்றாம் நாள் மறைந்தவரின் புகைப் படத்தை வணங்கி காகங்களுக்கு சாதம் இடுவது வழக்கம். நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்துவிட, மூன்றாம் நாள் காரியங்களில் கலந்துகொண்டிருந்தேன். சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் 'கூறைக்கு சாப்பாடு போடுறவங்க எல்லாம் வந்து போடுங்க' என்று உரக்கச்சொல்ல, ஒருவர் பின் ஒருவராக
சாதத்தை கூரை மீது வீசினார்கள்!

இது ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!

  • காகத்திற்கு சோறிடுவது, கூரைக்கு சோறிடுவதாக மாறியது எப்படி?
  • காகத்திற்கு சோறிடுவது என்பது எதற்காக?
  • அவர் அழைத்தவிதம் சரிதானா?
  • காலபோக்கில் இது என்ன மாறுதல்களை உருவாக்கும்?
தொடரும்...